'கோட்' படம் 'மங்காத்தா' மாதிரி 100 மடங்கு இருக்கணும் - இயக்குனரிடம் அஜித் சொன்ன விஷயம்
|'கோட்' படம் மங்காத்தா மாதிரி 100 மடங்கு இருக்கணும் என அஜித் தன்னிடம் கூறியதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், 'கோட் 'படத்தின் டிரைலர் வெளியாக உள்ள தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'கோட்' படம் மங்காத்தா மாதிரி 100 மடங்கு இருக்கனும் என நடிகர் அஜித் தன்னிடம் கூறியதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
மங்காத்தா படம் பண்ணும்போதே அடுத்து விஜய்யை வச்சுப் படம் பண்ணு நல்லா இருக்கும் என்று அஜித் கூறினார். கோட் படத்தை நான் இயக்குவதாக சொன்னதும், எத்தனை வருஷமா நான் சொல்லி கொண்டிருக்கிறேன் சூப்பர் என்றார். மேலும் படம் ஆரம்பிக்கும்போதே மங்காத்தா மாதிரி 100 மடங்கு இருக்கணும் என அஜித் கூறியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.