'காதி': அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளில் வரும் புதிய அப்டேட்
|அனுஷ்கா ஷெட்டி கடைசியாக 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படத்தில் நடித்திருந்தார்.
சென்னை,
'அருந்ததி' பேய் படத்தில் நடித்து பிரபலமான அனுஷ்கா ஷெட்டி, தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, மாதவன், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அனுஷ்காவின் சினிமா வாழ்க்கையில் 'பாகுபலி' முக்கிய படமாக அமைந்தது.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. இதில், நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடித்திருந்தார். மகேஷ்பாபு பச்சிகொலா இயக்கிய இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, அனுஷ்கா தெலுங்கில் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.
கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் இப்படத்திற்கு 'காதி' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'வேடம்' படத்தையும் கிரிஷ்தான் இயக்கி இருந்தார். இந்நிலையில், 'காதி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள படக்குழு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நடிகை அனுஷ்கா வரும் 7-ம் தேதி தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தநாளில் படக்குழு 'காதி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.