< Back
சினிமா செய்திகள்
இது தான் என் மனதிற்கு நெருக்கமான படம்...ஜெயம் ரவி
சினிமா செய்திகள்

இது தான் என் மனதிற்கு நெருக்கமான படம்...ஜெயம் ரவி

தினத்தந்தி
|
24 Oct 2024 11:49 AM IST

நடிகர் ஜெயம் ரவி 'ஜினி' திரைப்படத்தை தன் மனதிற்கு நெருக்கமான படம் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து 'பிரதர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையில் வெளியாக உள்ளது.

தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், ஐசரி கே.கணேசன் தயாரித்துள்ள 'ஜீனி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுன் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்தநிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி, 'ஜீனி' படம் குறித்து பேசி உள்ளார். அதில், "ஜீனி படம் என் மனதிற்கு நெருக்கமான படம். இந்த படம் பேண்டஸி மற்றும் எமோஷன் கலந்த கலவையாகும். இந்த படத்தில் காமெடி மற்றும் காதல் ஆகியவை வித்தியாசமான கோணத்தில் காட்டப்பட்டிருக்கும். இந்த படத்தின் சுவாரசியமான கதைக்காக இந்த படம் பான் இந்தியா அளவில் ரசிகர்களை கவரும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்