கவுரி கிஷன் பிறந்தநாள்... போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படக்குழு
|நடிகை கவுரி கிஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது 'எல்.ஐ.கே.' (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். எஸ்.ஜே சூர்யா, கவுரி கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவை ஈஷா யோகா மையத்தில் ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கியது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் கீர்த்தி ஷெட்டியின் போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் நடிகை கவுரி கிஷன் பிறந்தநாளை (ஆகஸ்ட் 17) முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.