< Back
சினிமா செய்திகள்
Game Changer will collect twice as much as RRR - Salman Khan
சினிமா செய்திகள்

'கேம் சேஞ்சர், ஆர்.ஆர்.ஆர்-ஐ விட 2 மடங்கு வசூல் செய்யும்' - சல்மான் கான்

தினத்தந்தி
|
7 Jan 2025 6:16 AM IST

கேம் சேஞ்சர் படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கி உள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இதன் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி, சலமான் கான் தொகுப்பாளராக இருக்கும் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் படத்தின் புரமோஷனுக்காக கலந்துகொண்டனர்.

அப்போது சல்மான் கான், ராம் சரண் முன்னதாக நடித்திருந்த ஆர்.ஆர்.ஆர் படத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கேம் சேஞ்சர் வசூல் செய்யும் என்று கூறினார்.

ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் ரூ. 1,150 கோடிக்கு மேல் வசூலித்தது மட்டுமில்லாமல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளயும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்