< Back
சினிமா செய்திகள்
Game Changer: S.J. Surya completes dubbing for key scene with Ram Charan
சினிமா செய்திகள்

'கேம் சேஞ்சர்': 2 முக்கிய காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்த எஸ்.ஜே.சூர்யா

தினத்தந்தி
|
22 Nov 2024 6:56 AM IST

கேம் சேஞ்சர் படத்தில் 2 முக்கிய காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.

அடுத்த மாதம் 20-ந் தேதி வெளியாக இருந்த இப்படம், பின்னர் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்தது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் 2 முக்கிய காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளதாக எஸ்.ஜே.சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கேம் சேஞ்சர் படத்தில் 2 முக்கிய காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துவிட்டேன். ஒன்று குளோபல் ஸ்டார் ராம்சரண் மற்றொன்று ஸ்ரீகாந்த் சார். இதை முடிக்க ஒரு முழு நாள் தேவைப்பட்டது' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்