< Back
சினிமா செய்திகள்
Game Changer: Ram Charan’s Game Finished
சினிமா செய்திகள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராம்சரண் படத்தின் படப்பிடிப்பு நிறைவு - ரசிகர்கள் உற்சாகம்

தினத்தந்தி
|
8 July 2024 9:00 AM IST

ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், சங்கர் இயக்கத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் "கேம் சேஞ்சர்" படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இயக்குனர் சங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவாகும். சங்கருடன் இணைந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைக்க திரு ஒளிப்பதிவு மேற்கொள்ள தில் ராஜு இப்படத்தை தயாரித்துள்ளார். படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகாத நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் செய்தி ஒன்று வந்துள்ளது.

அதன்படி "கேம் சேஞ்சர்" படத்தின் முழு படப்பிடிப்பையும் ராம்சரண் முடித்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. அதனைத்தொடர்ந்து இப்படத்தின் டப்பிங் பணிகளில் ராம்சரண் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பது ராம்சரண் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்