'கேம் சேஞ்சர்'- கியாரா அத்வானி பிறந்தநாளில் புதிய போஸ்டர் வெளியீடு
|கியாரா அத்வானிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக 'கேம் சேஞ்சர்' படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
சென்னை,
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கியாரா அத்வானி தெலுங்கிலும் நடித்து வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் தயாராகும் 'கேம் சேஞ்சர்' படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்தபடத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்கின்றனர். ஆக்சன் கலந்த திரில்லர் படமான இது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. வருகிற டிசம்பர் 25-ம் தேதி (கிறிஸ்துமஸ்) அன்று படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இன்று இப்படத்தின் நடிகை கியாரா அத்வானி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தநிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கேம் சேஞ்சர் படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதில் 'எங்கள் கியாரா அத்வானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவருடைய துடிப்பான ஆற்றல் விரைவில் உங்கள் இதயங்களை மயக்கும்' என்று பதிவிட்டுள்ளது.
இதற்கிடையில், நடிகை கியாரா அத்வானி, ரன்வீர் சிங்குடன் 'டான்-3' மற்றும் ஹிருத்திக் ரோஷனுடன் 'வார்-2' ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.