கேம் சேஞ்சர் படம் : இயக்குனர் ஷங்கருடன் இணைந்து பணியாற்றியது பாக்கியம் - ராம் சரண்
|ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான ""இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன் மற்றும் 2.0 போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'இந்தியன் 2' திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.
இயக்குனர் ஷங்கர் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி வெளியாக உள்ளது. அதற்கான புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கருடன் இணைந்து பணியாற்றியதை பற்றி ராம் சரண் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில், ஷங்கர் சாரை 'நண்பன்' படத்தின் ரீமேக்கான "3 இடியட்ஸ்" படத்தின் நிகழ்ச்சியில் சந்தித்ததை சரண் நினைவு கூர்ந்தார். நான் ஷங்கர் சாரின் அருகில் அமர்ந்திருந்தேன், 'என்னையோ, என் அப்பாவையோ அல்லது என் சமகால ஹீரோக்களை வைத்து அவரை தெலுங்குப் படம் பண்ண சொல்ல வேண்டும் என்று யோசித்தேன். ஆனால் அவரிடம் சொல்லும் தைரியம் எனக்கு இல்லை," என்றார்.
பின்ர் என்னை எஸ்.எஸ்.ராஜமவுலியின் "ஆர்.ஆர்.ஆர்" படத்தின் போது, ஷங்கர் இயக்கும் ஒரு படத்தின் பாகமாக நடிக்க தயாரிப்பாளர் தில் ராஜு அணுகினார். அதை நான் எதிர்பார்க்கவில்லை. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் ஷங்கர் இருவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெரிய பாக்கியம். அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இவர்கள் இருவரும் 'டாஸ்க் மாஸ்டர்கள்'. அவர்களால் முடிந்த அளவு சிறப்பானதையே செய்ய விரும்புவார்கள். என்று கூறியுள்ளார்.