< Back
சினிமா செய்திகள்
ஆதி உயிரினமான யாளி-யை கண் முன் நிறுத்தும் கஜானா திரைப்படம்
சினிமா செய்திகள்

ஆதி உயிரினமான 'யாளி'-யை கண் முன் நிறுத்தும் 'கஜானா' திரைப்படம்

தினத்தந்தி
|
18 March 2024 7:01 PM IST

மாயமந்திர காட்சிகளும், மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரமாண்டமான சாகச திரைப்படமாக உருவாகி வரும் 'கஜானா' திரைப்படத்தில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம், 'கஜானா'. சாந்தினி, வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். போர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கியுள்ளார்.

படம் பற்றி படக்குழு கூறும்போது "இது, இண்டியானா ஜோன்ஸ், நேஷ்னல் டிரஷர் போன்ற ஹாலிவுட் படங்களைப் போல மாயமந்திரம் மற்றும் மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு உருவாகியுள்ள படம். அழிந்துப்போன ஆதி உயிரினமான யாளியை இந்தப் படத்துக்காக கிராபிக்ஸில் வடிவமைத்துள்ளோம். இந்தப் படத்துக்கு பிறகு யாளி விலங்கை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். விஎப்எக்ஸ் காட்சிகள் பேசப்படும்.

யோகி பாபு, அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் நடித்துள்ள காட்சிகளும் அனைவருக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும். மே முதல் வாரம் படம் வெளியாகும்" என்றனர்.

மேலும் செய்திகள்