< Back
சினிமா செய்திகள்
From Panchathanthiram to Thug Life: Kamal Haasan wants June release
சினிமா செய்திகள்

'பஞ்சதந்திரம் 'முதல் 'தக் லைப்' வரை: ஜூன் மாத ரிலீசை விரும்பும் கமல்ஹாசன்

தினத்தந்தி
|
9 Nov 2024 7:50 PM IST

சுமார் 60 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் கமல்ஹாசன் 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகர்களுல் ஒருவர் கமல்ஹாசன். சுமார் 60 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் இவர் 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியாகின்றன. ஆனால் கமல்ஹாசனுக்கு ஜூன் மாதம் மிகவும் ஸ்பெஷல்.

ஏனென்றால், அந்த மாதம் வெளியான அவரது படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர். அவ்வாறு இவர் நடிப்பில் ஜூன் மாதத்தில் வெளியான படங்களை தற்போது காணலாம்.

'பஞ்சதந்திரம்'

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த திரைப்படம் 'பஞ்சதந்திரம்'. ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி, சிம்ரன், ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த இப்படம் கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி வெளியானது.

'தசாவதாரம்'

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் பத்து வித்தியாசமான வேடங்களில் நடித்திருந்த படம் 'தசாவதாரம்'. கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் தேதி வெளியாக இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அசின், நாகேஷ், நெப்போலியன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

'விக்ரம்'

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்தது. லோகேஷ் கனகராஜின் எல்.சி.யுவின் கீழ் உருவான இப்படத்தில், பகத்பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

'தக்லைப்'

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

இதுவரை ஜூன் மாதம் வெளியான கமல்ஹாசனின் படங்கள் ஹிட் அடித்திருக்கும் நிலையில், 'தக்லைப்' படமும் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்