< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திர முன்னாள் மந்திரி ரோஜா சாமி தரிசனம்
|6 Nov 2024 6:35 AM IST
திருத்தணி முருகன் கோவிலில் ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.
திருவள்ளூர்,
கந்தசஷ்டி விழா கடந்த 2-ந்தேதி தொடங்கிய நிலையில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. கந்தசஷ்டி விரதம் மேற்கொண்டு வரும் பக்தர்கள், தமிழகத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆந்திர மாநில முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா கந்தசஷ்டி விரதம் மேற்கொண்டு வருகிறார். இதையொட்டி அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அங்கு வந்திருந்த பக்தர்கள் ரோஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.