'முதல்முறை என்னுடைய படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி உள்ளது' - நடிகர் கவின்
|கோவையில் 'பிளடிபெக்கர்' படத்தை படக்குழு பார்த்துள்ளது.
சென்னை,
இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் பிலமென்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் 'பிளடி பெக்கர்'. இந்த படத்தை நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் 'பிளடி பெக்கர்' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலாகின. இந்தசூழலில், இன்று தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கோவையில் 'பிளடிபெக்கர்' படத்தை படக்குழு பார்த்துள்ளது. பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கவின் பேசுகையில்,
'முதல்முறை என்னுடைய படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி உள்ளது. எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்' என்றார். இன்று சிவகார்த்திகேயனின் 'அமரன்', ஜெயம் ரவியின் 'பிரதர்', துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட படங்கள் இன்று வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.