< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
4-வது முறையாக சல்மான் கான் படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்?
|6 Dec 2024 12:37 PM IST
சல்மான் கான் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' படத்தில் நடித்து வருகிறார்.
மும்பை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் இவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சல்மான் கானின் அடுத்த பாலிவுட் படத்தை பிரபல இயக்குனர் கபீர் கான் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இதற்கு முன்பு சன்மான் கான் நடிப்பில் வெளியான ஏக் தா டைகர், பஜ்ரங்கி பைஜான் மற்றும் டியூப்லைட் போன்ற வெற்றிப்படங்களை இயக்கி இருந்தார்.
தற்போது வெளியாகியுள்ள தகவல் உண்மையாகும் பட்சத்தில் 4-வது முறையாக சல்மான் கான் படத்தை கபீர் கான் இயக்குவார். மேலும், இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.