ரித்திகா சிங்கை தொடர்ந்து, வெளியான துஷாரா விஜயனின் கதாபாத்திர அறிமுக வீடியோ
|நடிகை துஷாரா விஜயனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை 'வேட்டையன்' படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170-வது படமான 'வேட்டையன்' உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.நேற்று, இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்தது.
அதன்படி சமீபத்தில், ரித்திகா சிங்கின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது. ரூபா என்ற போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார். இந்நிலையில், அவரைத்தொடர்ந்து நடிகை துஷாரா விஜயனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சரண்யா என்ற ஆசிரியராக துஷாரா நடிக்கிறார். விரைவில், மற்ற நடிகர்களின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.