< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும் - ஏ.ஆர்.ரகுமான்
|17 Nov 2024 11:42 PM IST
நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம் என ஏ.ஆர்.ரகுமான் பேசினார்.
சென்னை,
சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான மெய்நிகர் தொழில்நுட்ப மைய விருதை இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் பெற்றார். 2022 ஆம் ஆண்டு வெளிவந்த லீ மஸ்க் திரைப்படத்திற்கான மெய் நிகர் தொழில்நுட்பம் விருதை இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் பெற்றார். இதன்பின்னர் ஏஆர் ரஹ்மான் கூறியவது;
உலகத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்திற்காக, நான் பிறந்த ஊரில் விருது வாங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம். புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும். இந்தியாவில் வெர்ச்சுவல் ரியாலிட்டி மூலமாக கோயில்களை சுற்றி பார்க்கலாம். கல்யாண நிகழ்ச்சியை உணர்வு பூர்வமாக ரசிக்கலாம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும்." என தெரிவித்தார்.