< Back
சினிமா செய்திகள்
காதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

'காதி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
7 Nov 2024 1:38 PM IST

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு 'காதி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

'அருந்ததி' பேய் படத்தில் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, மாதவன், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அனுஷ்காவின் சினிமா வாழ்க்கையில் 'பாகுபலி' முக்கிய படமாக அமைந்தது. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. தற்போது இவர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் "காதி" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகை அனுஷ்கா செட்டி மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார்.

இந்த நிலையில், அனுஷ்கா இன்று தன்னுடைய 47வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு காதி படக்குழுவினர் அனுஷ்கா ஷெட்டியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ இன்று மாலை 4 மணியளவில் வெளியாகும் என்று அதில் தெரிவித்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் மீண்டும் அருந்ததியா? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக இருக்க வேண்டும் என்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்