< Back
சினிமா செய்திகள்
First look of Tovino Thomas Nari Vetta released
சினிமா செய்திகள்

டோவினோ தாமஸ் நடிக்கும் 'நரி வேட்ட'படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

தினத்தந்தி
|
22 Jan 2025 12:31 PM IST

இயக்குனர் சேரன் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் தற்போது பிருத்விராஜ் இயக்கத்தில் எல் 2 எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் அனுராஜ் மனோகர் இயக்கும் 'நரி வேட்ட' படத்திலும் நடித்து வருகிறார்.

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் தமிழில் பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இது சேரன் நடிக்கும் முதல் மலையாள படமாகும். இந்நிலையில், நேற்று நடிகர் டோவினோ தாமஸின் பிறந்தநாளை முன்னிட்டு நரி வேட்ட படக்குழு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்