< Back
சினிமா செய்திகள்
First Look of KGF Productions Mahavatar Narasimha Released
சினிமா செய்திகள்

கே.ஜி.எப் தயாரிப்பு நிறுவனத்தின் 'மகாவதார் நரசிம்மா'வின் பர்ஸ்ட் லுக் வெளியானது

தினத்தந்தி
|
17 Nov 2024 9:17 AM IST

ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும் புதிய படத்திற்கு 'மகாவதார் நரசிம்மா' என பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 திரைப்படங்களின் மூலம் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்திய அளவில் பிரபலமானது. அதனைத்தொடர்ந்து, ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'சலார்' படமும் ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இதனையடுத்து, இந்நிறுவனம் பிரபாசை வைத்து 3 படங்களை தயாரிக்க உள்ளது. இப்படங்களை 2026, 2027, 2028 ஆகிய ஆண்டுகளில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் ஒரு புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 'மகாவதார் நரசிம்மா' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அஸ்வின் குமார் எழுதி இயக்க சாம் சி.எஸ் இசைமைக்க இருக்கிறார். மேலும், ஹோம்பலே பிலிம்ஸ் வழங்கும் இப்படத்தை ஷில்பா தவான், குஷால் தேசாய் மற்றும் சைதன்யா தேசாய் ஆகியோர் கிளீம் புரொடக்சன்ஸ் கீழ் தயாரிக்க உள்ளனர்.

இதுவரை இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாதநிலையில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்