< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பிரபல பாடகர் உதித் நாராயண் குடியிருப்பில் தீ விபத்து
|7 Jan 2025 9:33 PM IST
இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
மும்பை,
உதித் நாராயண் என்பவர் பிரபல பாடகர் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பாடியுள்ளார். தமிழில் இவர் ரட்சகன் படத்தில் 'சோனியா சோனியா', மிஸ்டர் ரோமியோ படத்தில் 'ரோமியோ ஆட்டம் போட்டால்' உள்ளிட்ட பல பாடங்களை பாடி தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராக உள்ளார்.
இந்த நிலையில், மும்பை அந்தேரி தெற்கு பகுதியில் இவர் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் சிலர் காயமடைந்ததகாவும், ஒருவர் உயிரிழந்த விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் நடைபெறும் போது பாடகர் உதித் நாராயண் வீட்டில் இல்லை என்று அண்டை வீட்டார் தெரிவித்துள்ளனர்.