'பாஸ்ட் & பியூரியஸ் 11' - அப்டேட் கொடுத்த டைரஸ் கிப்சன்
|நடிகர் டைரஸ் கிப்சன் 'பாஸ்ட் & பியூரியஸ் 11' தொடர்பான சில அப்டேட்டுகளை பகிர்ந்திருக்கிறார்.
வாஷிங்டன்,
2001-ல் அறிமுகமானதில் இருந்து, பாஸ்ட் & பியூரியஸ் தொடர் உலகளவில் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. விரைவில் பாஸ்ட் & பியூரியஸ் 11 உருவாக உள்ளது. இதனால், பாஸ்ட் & பியூரியஸ் ரசிகர்கள் தற்போது வரவிருக்கும் பதினொன்றாவது தொடரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த தொடரில் நடித்துள்ள டைரஸ் கிப்சன் இது தொடர்பான சில அப்டேட்டுகளை பகிர்ந்திருந்தார்.
இந்த தொடரின் ஸ்கிரிப்டை அவர் இன்னும் படிக்கவில்லை என்றும், இருந்தபோதிலும், அவர் நடிகர் வின் டீசல் மற்றும் இயக்குனர் லூயிஸ் லெட்டரியருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். ஸ்கிரிப்ட் இறுதி செய்யப்பட்டவுடன் அடுத்த வருட தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்தார்
கடந்த பாஸ்ட் & பியூரியஸ் தொடரில் ரசிகர்களை கவர்ந்த கதாபாத்திரங்கள் இந்த தொடரிலும் இருப்பதாக கூறப்படுகிறது. இது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த தொடர் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிகிறது.