'அடுத்த ஆலியா பட்டா?' - ஓப்பனாக பேசிய அனன்யா பாண்டே
|ஆலியா பட்டுடன் ஒப்பிடப்படுவது குறித்து அனன்யா பாண்டே பேசியுள்ளார்.
மும்பை,
ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அனன்யா பாண்டே. அதன் பிறகு பதி பத்னி அவுர் வா போன்ற படங்களில் நடித்தார். மேலும், நடிகை அனன்யா பாண்டே 'காலி பீலி', 'கெஹ்ரையான்', 'லைகர், டிரீம் கேர்ள்-2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் தனது முதல் வெப் தொடரான 'கால் மீ பே'வில் நடித்திருந்தார். இந்த தொடர் கடந்த மாதம் 6-ம் தேதி பிரைம் வீடியோ ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இதனைத்தொடர்ந்து, 'சி.டி.ஆர்.எல்' என்ற படத்தில் நடித்துள்ளார். சாப்ரான் மற்றும் அந்தோலன் பிலிம்ஸ் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.
இந்த திரில்லர் படத்தில் அனன்யா பாண்டே கண்டன்ட் கிரியேட்டராக நடிக்கிறார். இப்படம் வரும் 4-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்பட புரொமோஷனில் ரசிகர் ஒருவர் "அனன்யா பாண்டேதான் அடுத்த ஆலியா பட் என்று கூறினார். அதற்கு ஓப்பனாக அனன்யா பாண்டே பதிலளித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,
'இல்லை. ஆலியா பட் போன்ற திறமையான ஒருவருடன் என்னை போன்ற ஒருவரை ஒப்பிடும்போது மகிழ்ச்சியாகதான் உள்ளது. அது எனக்கு கிடைத்த பாராட்டும் கூட. ஆனால், அவர் செய்த சாதனைகளை என்னால் தொடவே முடியாது, என்றார்.