< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் மற்றும் பாகுபலியை டாம் அண்ட் ஜெர்ரியுடன் ஒப்பிடும் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ
|3 Jan 2025 9:32 AM IST
மிகவும் விரும்பி பார்க்கப்படும் கார்ட்டூன்களில் ஒன்று டாம் அண்ட் ஜெர்ரி.
சென்னை,
குழந்தைகளால் மிகவும் விரும்பி பார்க்கப்படும் கார்ட்டூன்களின் ஒன்று டாம் அண்ட் ஜெர்ரி. இதில், முக்கிய கதாபாத்திரமாக வரும் ஜெர்ரியுடன் புஷ்பா ஸ்டைலை ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஜெர்ரி மட்டுமில்லாமல், புஷ்பாவின் நடை மற்றும் நடன அசைவுகள் டாமுடனும் ஒப்பிடப்பட்டுள்ளன.
இதனையடுத்து, புஷ்பா டாமை காபி அடித்துள்ளார் என்றும் 100 சதவிகிதம் டாம் அண்ட் ஜெர்ரியிலிருந்து இந்த ஸ்டைலை புஷ்பா படக்குழு காபி அடித்துள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
புஷ்பா மட்டுமில்லாமல்', எஸ்எஸ் ராஜமவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'பாகுபலி' படக்காட்சிகளும் டாம் அண்ட் ஜெர்ரியுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.