முதல் பாலிவுட் படத்தை இயக்குவது பற்றி பகிர்ந்த பிரபல கன்னட இயக்குனர் ஹர்ஷா
|பாஹி 4 படத்தின் மூலம் இயக்குனர் ஹர்ஷா பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
சென்னை,
பிரபல கன்னட இயக்குனர் ஹர்ஷா, இவர் தற்போது பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். அதன்படி, இவர் பாலிவுட்டில் இயக்கி வரும் படம் பாஹி 4. இப்படத்தில், டைகர் ஷெராப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில், இப்படத்திலிருந்து டைகர் ஷெராப்பின் தோற்றம் வெளியாகி வைரலானது.
இப்படம் அடுத்த அண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இயக்குனர் ஹர்ஷா முதல் பாலிவுட் படத்தை இயக்குவது பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'வடக்கில் கன்னடப் படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதனைப்படைத்த திறமையான இயக்குனர்களுக்கு நன்றி. பெரிய படங்கள் மட்டுமல்ல, சிறிய படங்களும் பாராட்டப்படுகின்றன. தற்போது, கிடைத்த புதிய வாய்ப்பிற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னை நம்பி டைகர் ஷெராப் பொன்ற ஒரு யூத் ஐகானுடன் இவ்வளவு பெரிய படத்தை இயக்க வாய்ப்பளித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.