< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் கைது
|20 Aug 2024 9:45 PM IST
ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்,
பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன். இவர் "கில் பில்" (2003), "ப்ரீ வில்லி" (1993) மற்றும் "தெல்மா & லூயிஸ்" (1991) போன்ற திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். இவ்வாறு அமெரிக்காவின் பிரபல நடிகராக இருக்கும் மைக்கேல் மேட்சன் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குடும்ப வன்முறை குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.அதனைத்தொடர்ந்து, மைக்கேல் மேட்சனிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.