< Back
சினிமா செய்திகள்
Fahadh Faasil joins the shooting of Mammootty-Mohanlal starrer
சினிமா செய்திகள்

மம்முட்டி - மோகன்லால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் இணைந்த பகத்பாசில்

தினத்தந்தி
|
22 Nov 2024 10:53 AM IST

சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டி - மோகன்லால் இப்படத்தில் ஒன்றாக நடிக்கின்றனர்.

சென்னை,

சமீபத்தில் வெளியான 'ஆவேசம்' படத்தின் வெற்றிக்கு பின்னர், பகத்பாசில் நடித்துள்ள படம் 'புஷ்பா2: தி ரூல்'. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து, மம்முட்டி - மோகன்லால் ஒன்றாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க பகத்பாசில் ஒப்பந்தமாகியுள்ளார்.

சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டி - மோகன்லால் இப்படத்தில் ஒன்றாக நடிக்கின்றனர். இப்படத்தின், படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இந்தப் படத்துக்காக மம்முட்டி 100 நாட்களும், மோகன்லால் 30 நாட்களும் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பகத் பாசில் இந்த படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தை 'டேக் ஆப்', 'மாலிக்' படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.

மேலும் செய்திகள்