< Back
சினிமா செய்திகள்
Education is the only weapon we have viral Anjaami trailer
சினிமா செய்திகள்

'நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் கல்விதான்' - வைரலாகும் 'அஞ்சாமை' டிரெய்லர்

தினத்தந்தி
|
28 May 2024 9:02 PM IST

'அஞ்சாமை' படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார் விதார்த். கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற விதார்த் பல்வேறு துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மணிகண்டன் இயக்கிய குற்றமே தண்டனை , சுரேஷ் சங்கையா இயக்கிய ஒரு கிடாயின் கருணை மனு , ராதா மோகன் இயக்கிய காற்றின் மொழி , நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கிய குரங்கு பொம்மை கடந்த ஆண்டு வெளியான டெவில் உள்ளிட்ட படங்கள் விதார்த்தின் திறமையை வெளிப்படுத்தும் படங்களாக அமைந்தன.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் விதார்த் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் அஞ்சாமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்