மலையாளத்தை விட தெலுங்கில் அதிக அன்பை பெறும் துல்கர் சல்மான்
|மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைக்கிறது.
சென்னை,
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைக்கிறது.
ஒரு நடிகர் தனது சொந்த மண்ணில்தான் அதிக அன்பை பெறுவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், மலையாள நடிகர் துல்கர் சல்மான் விஷயத்தில் இது நேர்மாறாக உள்ளது. நடிகர் துல்கர் சல்மான் தற்போது தெலுங்கு ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் நட்சத்திரமாகி இருக்கிறார்.
இதனை இவர் படங்களின் வசூலை பார்த்தாலே நாம் அறிந்து கொள்ளலாம். அதன்படி, இதற்கு முன்பு இவர் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' மட்டுமில்லாமல் தற்போது வெளியாகி உள்ள 'லக்கி பாஸ்கர்' படமும் தெலுங்கில் அதிகமாக வசூலித்துள்ளது.
இதற்கு தெலுங்கு ரசிகர்கள் இவரை தங்கள் மண்ணை சார்ந்தவர்போல் எண்ணுவதே காரணமாக இருக்கலாம். லக்கி பாஸ்கர் வெளியாகி 3 நாட்கள் கடந்துள்ளநிலையில், இப்படம் உலகம் முழுவதும் ரூ. 39.9 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.