< Back
சினிமா செய்திகள்
Dragon crew introduces new characters one after another
சினிமா செய்திகள்

அடுத்தடுத்து கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் 'டிராகன்' படக்குழு

தினத்தந்தி
|
10 Nov 2024 8:14 PM IST

'டிராகன்' படக்குழு கதாபாத்திர அறிமுக புகைப்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, கதாநாயகனாக நடித்து 'லவ் டுடே' படத்தை இயக்கினார். இப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார்.

இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் கதாபாத்திர அறிமுக புகைப்படங்களை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. நேற்று மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கே. எஸ். ரவிகுமார் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், ஜார்ஜ் மரியன் மற்றும் இந்துமதி புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில், ஜார்ஜ் மரியன் 'தனபால்' என்ற பாத்திரத்திலும், இந்துமதி 'சித்ரா' என்ற பாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்