மாளவிகா மோகனன் இல்லை...தங்கலானில் நடிக்க பா.ரஞ்சித் முதலில் அணுகியது யாரை தெரியுமா?
|ரசிகர்களை வெகுவாக கவர்ந்த தங்கலான் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
சென்னை,
விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
கோலார் தங்க வயலில் தங்கம் கண்டறியப்படுவது சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த மாளவிகா மோகனன் பா.ரஞ்சித்தின் முதல் தேர்வாக இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா ?. ஆம், இப்படத்தில், ஆரத்தி வேடத்தில் நடிக்க முதலில் இயக்குனர், நடிகை ராஷ்மிகா மந்தனாவை அணுகி இருக்கிறார். ஆனால், சில காரணத்தால் அவர் நடிக்க முடியாமல் போயுள்ளது. இதனையடுத்து, ஆரத்தியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா டிசம்பர் 6-ம் தேதி வெளியாக உள்ள புஷ்பா 2 படத்தில் பிசியாக இருந்ததால் தேதி இல்லாமல் போன காரணத்தால் பா ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் ராஷ்மிகா நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.