கமல்ஹாசனுக்கு 'உலகநாயகன்' என்று பட்டம் சூட்டப்பட்ட முதல் படம் எது தெரியுமா?
|இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கமல்ஹாசனுக்கு உலகநாயகன் என்ற பட்டத்தை வழங்கினார்.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவர் இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர். சுமார் 60 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் இவர் 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன் ரசிகர்களால் அன்புடன் 'உலகநாயகன்' என்று அழைக்கப்படுகிறார். மேலும் அவரை 'ஆண்டவர்' என்றும் அழைத்து வருகின்றனர்.
2000 ஆம் ஆண்டில் 'தெனாலி' வெளியனாது. கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயராம், ஜோதிகா, தேவயானி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தில்தான் இவருக்கு உலகநாயகன் என்ற பட்டத்தை கே. எஸ். ரவிக்குமார் வழங்கினார். அதற்கு முன்னதாக காதல் இளவரன், காதல் மன்னன் என்று அழைக்கப்பட்டு வந்தார் கமல்ஹாசன்.
பல திரைப்படங்கள் கமல்ஹாசனை 'உலகநாயகன்' என்று டைட்டில் கார்டில் குறிப்பிட்டிருந்தாலும், 'விக்ரம்' தவிர இவரது சொந்த பேனரில் தயாரிக்கப்பட்ட படங்கள் உலகநாயகன் என்ற டைட்டில் கார்டுகள் பயன்படுத்தவில்லை. இதற்கிடையில் கமல் ஹாசன் 'தன்னை யாரும் உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்; கமல், கமலஹாசன் அல்லது KH என்று அழைத்தால் போதுமானது' என ரசிகர்கள், திரைத்துறையினர், கட்சியினருக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில், 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது.