< Back
சினிமா செய்திகள்
ஐந்து நாட்களில் விடுதலை 2 படத்தின் வசூல்...எவ்வளவு தெரியுமா?
சினிமா செய்திகள்

ஐந்து நாட்களில் 'விடுதலை 2' படத்தின் வசூல்...எவ்வளவு தெரியுமா?

தினத்தந்தி
|
25 Dec 2024 8:12 PM IST

வெற்றி மாறன் இயக்கிய விடுதலை 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.

விடுதலை 2 படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 2' திரைப்படம் கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மக்களுக்காக போராடிய, ஆனாலும் மக்களுக்கே தெரியாத, தலைவர்கள் குறித்து இப்படம் பேசியுள்ளது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் விடுதலை 2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை (5 நாட்களில்) ரூ. 42 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக தமிழ் நாட்டில் மட்டும் ரூ. 28 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னமும் படத்தின் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்