< Back
சினிமா செய்திகள்
பூஜா ஹெக்டே நடித்துள்ள  தேவா படத்தின் வசூல் இத்தனை கோடியா?
சினிமா செய்திகள்

பூஜா ஹெக்டே நடித்துள்ள "தேவா" படத்தின் வசூல் இத்தனை கோடியா?

தினத்தந்தி
|
8 Feb 2025 8:42 PM IST

நடிகர் ஷாகித் கபூர், பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘தேவா’ திரைப்படம் 8 நாட்களில் ரூ.48 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து பிரபலமானார். சூர்யாவுக்கு ஜோடியாக 'ரெட்ரோ' படத்திலும், ஷாஹித் கபூருடன் தேவா படத்திலும் நடித்து முடித்துள்ள இவர், தற்போது விஜய்க்கு ஜோடியாக 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார்.

இதில், தேவா படம் கடந்த ஆண்டே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனையடுத்து, 'தேவா' படம் கடந்த 31-ம் தேதி வெளியானது.

இந்நிலையில் 'தேவா' திரைப்படம் 8 நாட்களில் ரூ.48 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்