< Back
சினிமா செய்திகள்
கங்குவா படத்தின் முதல் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சினிமா செய்திகள்

'கங்குவா' படத்தின் முதல் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தினத்தந்தி
|
17 Nov 2024 10:57 PM IST

சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடந்த 14-ந்தேதி வெளியானது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த 14-ந்தேதி வெளியானது.

சூர்யா திரை வாழ்வில் அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படமாக கங்குவா அமைந்தது. இப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமான இப்படம் வெளியாகி உள்ளது.

11ம் நூற்றாண்டு மற்றும் தற்காலத்தில் நடக்கும் காட்சிகள் 'கங்குவா' படத்தில் இடம் பெற்றுள்ளன. படத்தில், அதீத சத்தம், 3 டி காட்சிகள் , நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்டவை குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், கங்குவா படம் 3 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் உலகம் முழுவதும் ரூ.127.64 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்