< Back
சினிமா செய்திகள்
Divorce case - Actor Jayam Ravi, wife Aarthi appear in court
சினிமா செய்திகள்

விவாகரத்து வழக்கு - நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி கோர்ட்டில் ஆஜர்

தினத்தந்தி
|
27 Nov 2024 6:22 PM IST

நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர்

சென்னை,

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2009-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தங்களது திருமண பதிவை ரத்து செய்து மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி ஜெயம் ரவி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து, விவாகரத்து கோரி ஜெயம் ரவி தொடர்ந்த மனு மீதான விசாரணை சென்னை குடும்ப நல கோர்ட்டில் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. விசாரணைக்கு ஜெயம் ரவி நேரிலும், ஆர்த்தி காணொலி காட்சி வாயிலாகவும் ஆஜராகி இருந்தனர்.

வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல கோர்ட்டு, நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சமரச தீர்வு எதுவும் எட்டப்படாதநிலையில், வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்