பிரபாஸ் பெயரை பச்சை குத்திய 'கல்கி 2898 ஏடி' பட நடிகை?
|திஷா பதானி தமிழில் சூர்யாவின் 'கங்குவா' மூலமாக அறிமுகமாக இருக்கிறார்.
மும்பை,
பாலிவுட்டில் பிசியான நாயகியாக வலம் வருபவர் திஷா பதானி. தமிழில் சூர்யாவின் 'கங்குவா' மூலமாக அறிமுகமாக இருக்கிறார். அதனைத்தொடர்ந்து, நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'கல்கி ஏடி 2898' படத்திலும் நடித்துள்ளார்.'வெல்கம் டு தி ஜங்கிள்' என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக திஷா பதானியும் நடிகர் பிரபாசும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. மேலும், இருவரும் டேட்டிங் செய்வதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், திஷா பதானி பச்சை குத்தியிருப்பது இந்த தகவல்களை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கூறலாம்.
நடிகை திஷா பதானி தனது கையில் 'பிடி' ('PD') என்று ஆங்கிலத்தில் பச்சைகுத்தியுள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் 'பி' என்பது பிரபாஸ் என்றும் 'டி' என்பது திஷா என்றும் கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும், சிலர் திஷா பதானி என்பதைதான் அவ்வாறு பச்சை குத்தியுள்ளார் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.