< Back
சினிமா செய்திகள்
மறைந்த பவதாரிணி ரெக்கார்டிங் வீடியோவை வெளியிட்ட யுவன்
சினிமா செய்திகள்

மறைந்த பவதாரிணி ரெக்கார்டிங் வீடியோவை வெளியிட்ட யுவன்

தினத்தந்தி
|
11 Nov 2024 5:14 PM IST

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ரெக்கார்டிங் போது எடுக்கப்பட்ட பவதாரிணி வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தமிழில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்று என்கிற பாடலைப் பாடி தேசிய விருது பெற்றவர் பாடகி பவதாரிணி. இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இவர் 1984-ல் வெளியான 'மை டியர் குட்டிச் சாத்தான்' மலையாள படத்தில் இடம்பெற்ற 'திதிதே தாளம்' பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து, 'ராசய்யா', 'அலெக்சாண்டர்', 'தேடினேன் வந்தது', 'அழகி', 'தாமிரபரணி', 'உளியின் ஓசை' உள்ளிட்ட பல படங்களுக்கும் பாடல் பாடியுள்ளார்.

இளையராஜாவின் மகளும், யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பின்னணி பாடகி பவதாரிணி புற்றுநோய் காரணமாக ஜனவரி 25, 2024ல் உயிரிழந்தார். பவதாரிணியின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ரெக்கார்டிங் போது எடுக்கப்பட்ட பவதாரிணி வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பவதாரிணி ஆகியோர் உள்ளனர்.

'கோட்' படத்தின் சின்ன சின்ன கண்கள்' பாடல் மறைந்த பாடகி பவதாரணி ஏஐ குரலில் உருவானது குறிப்பிடத்தக்கது

.

மேலும் செய்திகள்