'ராபின்ஹுட்': ராஷ்மிகா மந்தனா விலகியது ஏன்? - பதிலளித்த இயக்குனர்
|'ராபின்ஹுட்' படத்தில் ஸ்ரீலீலாவுக்கு முன்பு ராஷ்மிகா மந்தனா நடிக்க இருந்திருக்கிறார்.
சென்னை,
நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்குகிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் ஸ்ரீலீலாவுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருந்திருக்கிறார். ஆனால், பின்னர் சில காரணங்களால் விலகினார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் வெங்கி குடுமுலா, ராஷ்மிகா மந்தனா விலகியதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'ராபின்ஹுட் படத்தில் ராஷ்மிகா நடிக்க ஒப்புக்கொண்டபோது, அவர் இரண்டு இந்தி படங்களிலும், புஷ்பா2 படத்திலும் நடித்து வந்தார். இதனால், எங்கள் படத்தின் படப்பிடிப்புக்கான தேதி கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது, மேலும் நாங்கள் ராபின்ஹுட் படத்தை குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டிருந்தோம். இதனால்தான் அவருக்குப் பதிலாக ஸ்ரீலீலாவை நியமிக்க நாங்கள் முடிவு செய்தோம்' என்றார்.