< Back
சினிமா செய்திகள்
Director Seenu Ramasamy comments on the negative reviews of Suriya and `Ganguwa
சினிமா செய்திகள்

`கங்குவா' பட எதிர்மறை விமர்சனங்களுக்கு எதிராக இயக்குனர் சீனு ராமசாமி பதிவு

தினத்தந்தி
|
18 Nov 2024 9:22 AM IST

'கங்குவா' படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா குற்றம் சாட்டியிருந்தார்.

சென்னை,

சூர்யா நடிப்பில் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான கங்குவா படத்தில், அதீத சத்தம், 3 டி காட்சிகள் , நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்டவை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து, 'கங்குவா' படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி, சூர்யா மற்றும் `கங்குவா' படத்திற்கு எதிராக வரும் விமர்சனங்கள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,

'திரைப்பட விமர்சனம் செய்வது அவரவர் சுதந்திரம், கல்விப் பணிக்கு வெகுகாலம் நன்மை செய்து வரும் சூர்யா போன்றவர்களை தனிப்பட்ட அவதூறு செய்வது என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது. திரைத்துறைக்கும் அதனை சார்ந்த ஏனைய தொழில் முனைவோர்களுக்கும் பாதுகாப்பற்ற தன்மையை இது உணர்த்துகிறது' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்