< Back
சினிமா செய்திகள்
விஜய்க்கு 3 கதைகள் சொன்னேன் - இயக்குநர் மகிழ் திருமேனி
சினிமா செய்திகள்

விஜய்க்கு 3 கதைகள் சொன்னேன் - இயக்குநர் மகிழ் திருமேனி

தினத்தந்தி
|
27 Jan 2025 2:48 PM IST

நடிகர் விஜய்யிடம் மூன்று கதைகளைச் சொல்லி இயக்கத் தயாராக இருந்ததாக இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'விடாமுயற்சி' படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், டிரெய்லர் வெளியீட்டுக்கு பிறகு 'விடாமுயற்சி' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய மகிழ் திருமேனி, "தடம் படத்திற்குப் பின் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தேன். அவருக்காக 3 கதைகளைச் சொன்னேன். மூன்றையும் கேட்டுவிட்டு விஜய், 'மகிழ் நீங்கள் என்னை மிகவும் குழப்பிவிட்டீர்கள். மூன்றுமே எனக்குப் பிடித்திருக்கிறது. எதை தேர்ந்தெடுக்கலாம் என நீங்களே சொல்லுங்கள்' என்றார். அப்படி, அவருக்கான கதையாகவே அக்கதைகள் இருந்தன. ஆனால், உடனடியாக இயக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. பின், மற்றொரு சந்திப்பில், 'என்ன ஆச்சு மகிழ்' எனக் கேட்டார். இருவருக்கும் அடுத்தடுத்த படங்கள் இருந்ததால் இணைய முடியவில்லை. இப்போதும், அவர் அக்கதையில் நடித்தால் மாஸ் ஹீரோவுக்கான படமாகவே இருக்கும்." என்றார்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய 'விடாமுயற்சி' திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும் செய்திகள்