< Back
சினிமா செய்திகள்
‛கேம் சேஞ்சர் படத்தை பாராட்டி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பதிவு!
சினிமா செய்திகள்

‛கேம் சேஞ்சர்' படத்தை பாராட்டி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பதிவு!

தினத்தந்தி
|
13 Jan 2025 10:28 AM IST

ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 10-ந் தேதி வெளியான 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டியுள்ளார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரியான ராம் சரணுக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார பிரச்சினையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 10-ந் தேதி வெளியான இப்படம் ரூ.200 கோடிக்கும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்த படத்தை பாராட்டி கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛கேம் சேஞ்ஜர் படம் ஷங்கர் சாரின் பிரமாண்டமான மாஸ் அதிரடி படமாக உள்ளது. அதிரடியான அரசியல் வசனங்கள் மிகவும் ரசிக்க வைத்துள்ளது. ஷங்கரின் இந்த பிரமாண்ட படத்தில் ஒரு சிறிய பகுதியாக இருக்க எனக்கு அனுமதி கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்தில் ராம்சரண், எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவாளர் திருவின் கேமரா பணியும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்' என்று அவர் தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்