மூக்குத்தி அம்மனாக நயன்தாராவுக்கு முன் யார் நடிப்பதாக இருந்தது தெரியுமா?
|ஆர்.ஜே. பாலாஜி, மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.
சென்னை,
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் இயக்கி நடித்த படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதில் மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இந்த படம் மே 2020 இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால், கோரோனா தொற்று காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 14 நவம்பர் 2020 -ல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இபடத்தில் மூக்குத்தி அம்மனாக நடிக்க நயன்தாராவிடம் பேசுவதற்கு முன்பு இந்த பிரபல நடிகையிடம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, மூக்குத்தி அம்மனாக நடிக்க முதலில் ஆர்.ஜே. பாலாஜி நடிகை சுருதிஹாசனிடம் பேசியுள்ளார். அதற்கு சுருதிஹாசன் ஒப்புக்கொண்டும் உள்ளார். ஆனால் சிலகாரணத்தினால் அவர் விலக, நயன்தாரா நடித்ததாக கூறப்படுகிறது.
தற்போது, ஆர்.ஜே. பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. மேலும், அதில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.