'சமந்தா ஒரு அற்புதமான பெண்மணி' - நடிகை ராஷ்மிகா மந்தனா புகழாரம்
|நடிகை ராஷ்மிகா மந்தனா, சமந்தாவின் நெருங்கிய தோழியாவார்.
சென்னை,
இந்திய அளவில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் என்ற பட்டியலில் முதல் இடம் பிடித்து இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்த புஷ்பா திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தமிழில் கார்த்தியின் சுல்தான், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.
இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெறுகின்றன. சமீபத்தில் இவர் நடித்த சீதா ராமம், அனிமல் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தன. நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழியாவார். இருவரும் 'புஷ்பா: தி ரைஸ்' படத்தில் நடித்தனர். இந்நிலையில், சமந்தா ஒரு அற்புதமான பெண்மணி என்று ராஷ்மிகா மந்தனா புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது,
சமந்தா ஒரு அற்புதமான பெண்மணி. அவர் அழகானவர். மென்மையான இதயத்தை கொண்டவர். அவர் எல்லாவற்றிலும் வெற்றிகாண வேண்டும் என்று விரும்புகிறேன். நான் பாதுகாக்க விரும்பும் நபர் அவர். சமந்தாவின் உடல்நிலை குறித்து எனக்குத் தெரியும். ஆனால், சமந்தா அதைப் பற்றி பேச விரும்புகிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியாததால், அதைப் பற்றி அவரிடம் அதிகம் பேசவில்லை. இவ்வாறு கூறினார்.