விஜய்யுடன் நடிக்க தயங்கிய பிரியங்கா சோப்ரா - என்ன காரணம் தெரியுமா?
|'தமிழன்' படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா முதலில் தயக்கம் காட்டியதாக அவரது தாய் மது சோப்ரா கூறினார்.
சென்னை,
விஜய், பிரியங்கா சோப்ராஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, கடந்த 2002 இல் வெளியான திரைப்படம் 'தமிழன்' . இப்படத்தை மஜித் இயக்கி இருந்தார். இந்தப் படம் மூலம் கோலிவுட்டில் பிரியங்கா சோப்ராஅறிமுகமானார்.
இந்நிலையில், பிரியங்கா சோப்ராவின் தாய் மது சோப்ரா அளித்த பேட்டியில், 'தமிழன்' படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா முதலில் தயக்கம் காட்டியதாக கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது,
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பிரியங்கா சோப்ராவிடம் கூறினேன். முதலில் அவள் அழுதுவிட்டாள். படத்தில் நடிக்க விரும்பவில்லை என்றும் கூறினாள். பின்னர், அந்த வாய்ப்பை ஏற்கும்படி நான் அவளிடம் பரிந்துரைத்தேன், அவள் உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாள். அவள் உலக அழகி பட்டம் வென்ற பிறகு மாடலிங்கில் செல்ல விரும்பினாள், இவ்வாறு கூறினார்
பிரியங்கா சோப்ராவின் சினிமா வாழ்க்கையில் முதல் படமாக 'தமிழன்' அமைந்தது. 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.