< Back
சினிமா செய்திகள்
எக்ஸ் தளத்திலிருந்து விலகிய இயக்குனர் விக்னேஷ் சிவன். இதுதான் காரணமா?
சினிமா செய்திகள்

எக்ஸ் தளத்திலிருந்து விலகிய இயக்குனர் விக்னேஷ் சிவன். இதுதான் காரணமா?

தினத்தந்தி
|
1 Dec 2024 3:52 PM IST

பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் பக்கத்தை டெலிட் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை,

2007ம் ஆண்டு சிவி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார். விக்னேஷ் சிவன் பிறகு இயக்குனர், பாடலாசிரியர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று பன்முக பரிணாமங்களை எடுத்தார். 2012ம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து வெளியான போடா போடி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்பே தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களை வைத்து ஆல்பம் பாடல்களை எடுத்துள்ளார். 2015ம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் படம் இயக்கினார். அந்தப் படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே காதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2022 அக்டோபர் 9ம் தேதி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிக்கு உலகு, உயிர் என்ற இரட்டை ஆண் குழந்தை உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 2014ம் ஆண்டு வெளியான தனுஷின் வேலையில்லாப் பட்டதாரி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். 2018ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவின் நடிப்பில் விக்னேஷ் சிவனின் மூன்றாவது படமான "தானா சேர்ந்த கூட்டம்" வெளியானது.

நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' ஆவணப்படம் 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.இந்த ஆவணப்படத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகள் இடம்பெற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் ரூ.10 கோடி கேட்டு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகர் தனுஷ். நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமில் பதிவினை வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் தனுஷ் குறித்து பதிவிட்டார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது எக்ஸ் சமூக வலைதள கணக்கை நேற்று திடீரென டீஆக்டிவேட் செய்துள்ளார். நடிகை நயன்தாரா குறித்த 'நயன்தாரா - பியான்ட் த பேரிடேல்' ஆவணப்படம் வெளியாவதற்கு முன்பாக நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

அப்போது தனுஷ் பற்றி சில பதிவுகளை இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். அப்போது முதலே விக்னேஷ் சிவனின் எக்ஸ் தளம், மற்றும் இன்ஸ்டா தளங்களில் தனுஷ் ரசிகர்கள் அவரை கமெண்ட் செய்து வந்தனர்.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற இயக்குனர்களின் பேட்டி இடம் பெற்றிருந்தது. அந்த வீடியோவைப் பகிர்ந்து இந்த ஆண்டில் ஒரு படம் கூட இயக்காத விக்னேஷ் சிவன் எப்படி இதில் இடம் பெறலாம் என பலரும் கேள்வி கேட்டு கிண்டலடித்தனர். மேலும் அவர் நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகின. அஜித், நானும் ரெளடிதான் படத்தை பல முறை பார்த்தாக தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். இது நடந்தது, என்னை அறிந்தால் படத்திற்கு பாடல் எழுதிய சமயத்தில் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த படம், நானும் ரெளடிதான் படத்திற்கு முன்பே ரிலீஸாகி விட்டது. இதையடுத்து, விக்கி பொய் கூறுவதாக பலர் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

இப்படி அடுத்தடுத்து தன்னைப் பற்றிய விமர்சனங்கள் வருவதால் அவர் எக்ஸ் தளத்தை டீஆக்டிவேட் செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனாலும், இன்ஸ்டாகிராம் கணக்கை அவர் டீஆக்டிவேட் செய்யவில்லை.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் செய்திகள்