18 ஆண்டுகளை நிறைவு செய்த தனுஷின் 'திருவிளையாடல் ஆரம்பம்'
|பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2006ம் ஆண்டு வெளியான படம் "திருவிளையாடல் ஆரம்பம்".
சென்னை,
பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2006ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி வெளியான படம் "திருவிளையாடல் ஆரம்பம்". இந்த படத்தின் மற்றொரு நாயகனாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரேயா சரண் நடித்துள்ளார். மேலும் கருணாஸ் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் - தனுஷ் இருவருக்கும் இடையே நடக்கும் போட்டியே இந்த படத்தின் கதை. பிரகாஷ் ராஜின் தங்கையை காதலிக்கும் தனுஷ், ஒரே நேரத்தில் காதலிலும், வாழ்க்கையிலும் எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதை. இப்படம்100 நாட்களை கடந்து திரையில் ஓடி மக்கள் மத்தியில் வெற்றியை பெற்றது.
இந்நிலையில், 'திருவிளையாடல் ஆரம்பம்' படம் வெளியாகி இன்றோடு 18 வருடங்களை எட்டியுள்ளது. இப்படம் தற்போது வரை தனுஷின் கெரியரில் ஒரு சிறந்த படமாக கருதப்படுகிறது. இப்படம் 6 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், பர்மீஸ், வங்க மொழி, வங்கதேச மொழி, ஒடியா ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.