இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் தனுஷ் படங்கள்
|இந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியாக உள்ள படங்களுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
சென்னை,
கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படம் அவரது படத்திலேயே அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. இதனையடுத்து, இந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியாக உள்ள படங்களுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
அதன்படி, மிகவும் எதிர்பார்க்கப்படும் தனுஷ் படங்களை தற்போது காண்போம்.
1.இளையராஜா பயோபிக்
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
2. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது.
3.இட்லி கடை
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. அதே நாளில்தான் அஜித் நடித்துள்ள குட்பேட் அக்லி படமும் வெளியாக இருக்கிறது.
4. குபேரா
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் குபேரா. இப்படம் வருகிற ஜுன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது