< Back
சினிமா செய்திகள்
தனுஷ் நடிக்கும் 55வது படத்தின் பூஜை வீடியோ வைரல்
சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் 55வது படத்தின் பூஜை வீடியோ வைரல்

தினத்தந்தி
|
9 Nov 2024 5:59 PM IST

நடிகர் தனுஷின் 55வது திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் 'குபேரா' திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இது அவரது 51வது திரைப்படமாகும். 52வது திரைப்படமாக 'இட்லி கடை', 53 வது திரைப்படமாக 'தேரே இஷ்க் மெய்ன், 54வது திரைப்படமாக 'இளையராஜா' உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் தனது 55 வது திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ராஜ்குமார் பெரியசாமி `ரங்கூன்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கவுதம் கார்த்திக் நடித்திருந்த இந்தப் படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. 7 வருட இடைவெளிக்குப் பிறகு அவருடைய இரண்டாவது திரைப்படமான `அமரன்' திரைக்கு வந்திருக்கிறது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

`கோபுரம் பிலிம்ஸ்' அன்புசெழியன் தனுஷின் இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை வீடியோவை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பூஜை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்