4-வது படத்தை இயக்க தயாரான தனுஷ் - நடிகை இவரா?
|தனுஷ் இயக்க உள்ள நான்காவது படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அப்டேட் கொடுத்துள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பாடகர் , தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறைமைகளை கொண்டவர். இவர் பவர் பாண்டி, ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது தனுஷ் தனது 4-வது படத்தை இயக்க தயாராகியுள்ளார். இது குறித்து பேட்டியில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, 'தனுஷ் இயக்கும் நான்காவது படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும்' என்று கூறியுள்ளார். இது தவிர மற்ற தகவல் எதையும் அவர் வெளியிடவில்லை.
மேலும், நடிகர் பிரகாஷ் ராஜும் இது குறித்த சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, தனுஷ், நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படத்தை இயக்க தனுஷ் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இது நடைமுறைக்கு வந்தால், தனுஷ் இயக்கும் நான்காவது படமாக இது அமையும். இவர்கள் கடைசியாக திருச்சிற்றம்பலத்தில் இணைந்து நடித்தனர். இப்படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.