< Back
சினிமா செய்திகள்
தனுஷ் மற்றவர்களை ஏற்றிவிட்டு அழகு பார்ப்பவர் - ரோபோ சங்கர்
சினிமா செய்திகள்

தனுஷ் மற்றவர்களை ஏற்றிவிட்டு அழகு பார்ப்பவர் - ரோபோ சங்கர்

தினத்தந்தி
|
5 Dec 2024 4:04 PM IST

நடிகர் ரோபோ சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ் பற்றி மிக உயர்வாக பேசியுள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவார் ரோபோ சங்கர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'மாரி' திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவர் நடித்த சனிக்கிழமை என்ற கதாபாத்திரத்தால் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு தான் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க துவங்கினார்.

இந்த நிலையில், ரோபோ சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ் பற்றி மிக உயர்வாக பேசியுள்ளார். அதில், "மாரி திரைப்படத்தில் தனுஷுடன் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது என்றும், அவர் மற்றவர்களை ஏற்றிவிட்டு அழகு பார்ப்பவர் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் என்னுடன் பழகும் போது ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார். அவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு மனிதராக மிகப்பெரிய உயரத்தில் இருக்கின்றார்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்